• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஜூலை 28 முதல் கோவையில்..!

BySeenu

Jul 27, 2026

கோவையில் இந்திய ஹாக்கியின் வருங்கால நட்சத்திரங்களை நேரில் காணும் அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள ஹாக்கி மைதானத்தில் – அகில இந்திய ஹாக்கி சங்கத்தின் பொருளாளர் சேகர் ஜெ. மனோகரன் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி அலகின் பொதுச் செயலாளர் டாக்டர் பி. செந்தில்ராஜ்குமார் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது

16-வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் – 2026 போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை, கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி ஆஸ்ட்ரோ டர்ஃப் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது எனவும்

தமிழ்நாடு ஹாக்கி அலகு (HUT)சார்பில், ஹாக்கி இந்தியாவின் ஆதரவுடன் நடைபெறும் இந்த தேசிய அளவிலான போட்டியில், நாடு முழுவதும் உள்ள 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய ஜூனியர் தேசிய முகாமில் இடம்பெற்றுள்ள பல திறமையான வீரர்களும் இந்த தொடரில் களமிறங்க உள்ளதால், இந்திய ஹாக்கியின் எதிர்கால சர்வதேச வீரர்களை நேரில் காண ரசிகர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும்

குறிப்பாக 12 நாட்கள் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப்பில், 700-க்கும் மேற்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் பங்கேற்பதாகவும்

பங்கேற்கும் அணிகளுக்கான தங்குமிடம், போக்குவரத்து, மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும்

மேலும், கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இலவசமாக போட்டிகளைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக
இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.