மதுரை சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் கனமழை காரணமாக அரசு பேருந்துகள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை சுமார் 50 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மதுரை திருமங்கலம் வாடிப்பட்டி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு காலையில் எடுத்துச் செல்லப்படுகிறது இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மலை காரணமாக போக்குவரத்து பணிமனையில் மழைநீர் தேங்கி சேரும் சகதி மாத காணப்படுகிறது. மேலும் பெரிய பெரிய பள்ளங்கள் போக்குவரத்து பணிமனையில் உள்ளே இருப்பதால் மழைநீர் குழம்பு ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.

இதனால் பேருந்துகள் பணிமனையில் இருந்து வெளியேறி செல்வதில் கடும் சிரமம் எடுப்பது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஓட்டுநர்கள் பேருந்து பணிமனையை விட்டு வெளியே எடுத்து செல்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும் போக்குவரத்து பணி பணியில் சீரமைக்காத காரணத்தால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக மழை நீர் தேங்கி சேரும் சக அதிகமாக காணப்படுகிறது.
ஏற்கனவே வெற்றி பயணத் திட்டத்தின் மூலம் போக்குவரத்து களத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில் இது போன்ற காரணங்களால் பேருந்துகளும் அடிக்கடி பழுதாக கூடிய சூழ்நிலை உள்ளதாக போக்குவரத்து பணியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஆகையால் சோழவந்தானில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





