• Mon. Oct 26th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

கோவையில் கோலாகலமாக திறக்கப்பட்ட ‘ஹோட்டல் ஓயாசிஸ்’..,

BySeenu

Oct 26, 2026

கோயம்புத்தூர் பீளமேடு ஹோப்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹோட்டல் ஓயாசிஸ்’ பிரம்மாண்ட திறப்பு விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

இப்புதிய ஹோட்டலை லட்சிய ஜனநாயக கட்சியின் கோவை கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரா.செந்தில் முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அலையன்ஸ் மாவட்ட 262 S முன்னாள் மாவட்ட ஆளுநர் அலையன்ஸ் ஆர். காளியப்பன், நேரு நகர் கிங்ஸ் தலைவர் அலையன்ஸ் பி. சுப்பிரமணியன் மற்றும் அதிமுக பீளமேடு பகுதி 24-வது வட்ட செயலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஹோட்டலின் உரிமையாளர் ஆர். விஜயராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வாடிக்கையாளர்களின் தங்கு வசதிக்காக ஹோட்டலில் மொத்தம் 14 நவீன அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பில்ஸ் ரூம்ஸ், கிட்ஸ் ரூம்ஸ் மற்றும் பார்ட்டி ஹால் போன்ற சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

நவீன வசதிகள் நிறைந்த இந்த ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் 9113235526 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம். எனத் தெரிவித்தனர்.