ஊரே போராட்ட களத்தில் இருக்கும் போது தன் சகாக்களுடன் ஜனநாயகம் படத்தை கண்டு களித்திருக்கிறார் முதல்வர், இது என்ன தேச குற்றமா என்று விஜய்யின் தம்பிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஜனநாயகத் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டு இருக்கிறார்கள் விஜய் வளர்பிலே வந்த தம்பிமார்கள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாகவோ, எதிர்பார்க்கவோ இதுவரை கருத்து சொல்லாமல் இருக்கிறார் முதல்வர் விஜய் , ஒருவேளை ஜனநாயகம் திரைப்படம் இந்த நீட் போராட்டத்தினால் பிளாப் ஆகிவிட்டது என்கிற கவலையிலே இருக்கிறாரோ என்னவோ முதல்வர் விஜய்.
இரண்டு நாளாக தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை, எப்போது முதல்வர் தலைமைச் செயலகம் வருவார் த.வெ.க அரசின் நிலைப்பாட்டை உறுதிபட தெரிவிப்பார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்
எது எப்படி போனாலும் சரி,
நாடு எதிர் கொண்டிருக்கிற மிகப்பெரிய வறட்சி பேரிடர் குறித்து உரிய கவனம் செலுத்துமா த.வெ.க. அரசு என்பதுதான் நாட்டு மக்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது
தமிழக அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு
தமிழகத்தில் கடுமையாக வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது .தமிழக நீர்வளத்துறை பராமரிப்பிலே 90 அணைகள்,14,141 ஏரிகள் உள்ளது. தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை குறைந்து வருவதால் அங்குள்ள அணைகள், பாசன ஏரிகள் நிரம்பாமல் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி ஆகும் தற்போது இவற்றிலே 71.2 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது இது அணைகளின் மொத்த கொள்ளளவில் 31.7 சதவீதம் தான் நீர் இருப்பு உள்ளது.
பல அணைகள் தூர்வரப்படாமல் கொள்ளளவு பாதிக்கப்பட்டுள்ளது எடப்பாடியார் ஆட்சியில் அணைகள் ஏரிகள் ,கண்மாய்களில் குடி மராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்படவில்லை
அதனால் சேறும், சகதியுடன் சொற்ப அளவிலே தான் நீர் உள்ளது பாசன ஏரிகளிலே 3483 ஏற்கனவே வறண்டு போய்விட்டன. மேலும் 6,126 ஏரிகள் வறண்டு விடும் நிலையின் அபாய கட்டத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
மழை குறைந்ததால் தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது காலநிலை மாற்றத்தால் அரியலூர் ,தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ,நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி ,திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்படலாம் என மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது .
அதற்கு ஏற்பபாசன ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது மேய்ச்சல் நிலங்களும் காய்ந்து கிடப்பதால் கால்நடைக்கு தீவினம் பற்றாக்குறை உள்ளது
இந்த நிலையில் தான் நீர் வளத்துறை அமைச்சரிடம் மேகதாது குறித்து கேள்வி எழுப்பினால் வாய் திறக்க மறுக்கிறார் ,காவேரியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி ஜூலையில் தண்ணீர் திறந்து விடவில்லை என்று கேள்வி கேட்டால் வாய் திறக்க மறுக்கிறார்,இப்போது பாசன அணைகளிலும் நீர் குறைந்து இருக்கிறது வறட்சியை நோக்கி அபாயத் திட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது தமிழகம் என்று கேள்வி கேட்டால் அதற்கும் வாய் மறுக்கிறார், ஆனால் ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்கான் சாப்பிட மட்டும் அவர் வாய் திறக்கிறாரே என்கிற நிலையை தான் தமிழகம் பார்த்துக் கொண்டிபார்த்து கொண்டிருக்கிறது.
நம்ம முதல்வர் தான் இது குறித்து வாய் திறக்க மறுத்தாலும், நீர்வளத்துறை அமைச்சர் இதற்காக வாய் திறந்து தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன,என்ன நடவடிக்கைகள் த.வெ.கஅரசு எடுத்து இருக்கிறது என்று சொன்னால் இந்த வறட்சி அபாய நோக்கி சென்று கொண்டிருக்கிற தமிழகத்திற்கு ஒரு பாதுகாப்பு அரணாக த.வெ.க அரசின்
நடவடிக்கைகள் அமையுமாக என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்
மொத்தத்தில் ஜனநாயகன் திரைப்பட பிளாப் ஆகிவிட்டதோ என்று கவலையில்ஆழ்ந்து இருக்கிறாரா முதல்வர் ,அந்த கவலையிலிருந்து வெளியே வருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் என்னதான் செய்ய முடியும் என தெரியவில்லையே,விஜய்யின் தம்பிமார்கள் மண்டியிட்டு மண் சோறும் சாப்பிட்டு பார்த்தார்கள் தீர்வுதான் கிடைக்கவில்லையே
நீட் தேர்வு போராட்டத்தினால் ஜனநாயகப் போராட்டம் தோல்வியடைந்து விட்டதோ என்கிற கவலையிலேயே இருக்கிறார் முதல்வர்.
முதல்வர் விஜய் மீண்டும் எழுந்து மேகதாது அணையை மீட்க வருவாரா? மீண்டு எழுந்து டெல்டா பகுதியை மீட்க வருவாரா? மீண்டு எழுந்து எலி கடித்ததனால் விரலை காணவில்லை அந்த தாயின் கண்ணீரைத் துடைக்க வருவாரா, மீண்டு எழுந்து அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழந்திருக்கிறாரே அந்த தாயின் கண்ணீரை துடைக்க வருவாரா எங்களுக்கு சாரி வேண்டாம் நீதி தான் வேண்டும் என்று போராடுகிற அந்த விஜய்யை தமிழகத்தில் இருந்து காணவில்லையே என்று தேடிக் கொண்டிருக்கிறது ஜென்சி தலைக்கு முறை விடை கொடுப்பாரா முதல்வர் விஜய் என கூறினர்.




