ஜனநாயக திரைப்படத்தை வெளியீட்டு தமிழ்நாட்டில் மாபெரும் சரித்திர சாதனையை நிகழ்த்தி காட்டி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துக் காட்டி மாபெரும் சரித்திர சாதனை நிகழ்த்தி காட்டி இருக்கிறார் முதல்வர் விஜய்.
முதல்வர் ச.ஜோசப் விஜய் நடித்த ஜனநாயக படம் வெளியீடு தமிழ்நாட்டில் விஜய் ரசிகர்களுக்கோ கொண்டாட்டம், ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு திண்டாட்டம். மாணவர்களுக்கோ போராட்டம் இதுதான் தமிழ்நாட்டின் நிலை

த.வெ.க அரசில் தமிழக காவல்துறையின் கட்டமைப்பு இல்லாதால் மக்களின் ஜனநாயகத்திற்கு பாதுகாப்பு கொடுக்க திணறி வருகிறார்கள் போலீசார்.முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்ட ஜனநாயகம் படத்திற்கு பாதுகாப்பு அளிக்க கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் திணறி வருகிறார்கள்.
தமிழக காவல்துறையில் 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பணியிலே இருக்க வேண்டும். ஆனால் தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் பேர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படை ,கஞ்சா புகையிலை பொருட்களை தடுக்க சிறப்பு அதிரடி படை என அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த காவல்துறையில் புதிதாக ஆட்களை தேர்வு செய்யாமல் ஏற்கனவே பணியில் இருக்கும் போலீசாரே மாற்றுப் பணியிலே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் .
ஆர்ப்பாட்டம், போராட்டம்,மறியல் கோயில் திருவிழாக்கள் ,விஐபி பாதுகாப்பு, நீதிமன்ற பணி ,மாற்றுப் பணி ,ரோந்து பணி ,அவசர விடுமுறை போன்ற இத்தனை நிகழ்வுகளில் குறைந்த எண்ணிக்கையிலான போலீஸ்சார் தான் காவல் நிலையங்களில் பணி புரிகின்றனர். மேலும் மகளிர் காவல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் போக்சோ வழக்குகளை கையாளுவதில் சிக்கல் நிலவுகிறது.இதற்கிடையிலே சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்ற தடுப்பு, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு ,பாலியல் துன்புறுத்துறை தடுத்தல் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் ஒழிப்பு ,ரவுடிகளை ஒடுக்குதல் போன்ற நடவடிக்கைக்கு போதிய கட்டமைப்பு வசதி இன்று ஒவ்வொரு நாளும் போலீசார் திணறி வருகின்றனர்.
புதிதாக ஆட்சி பொறுப்பற்றுள்ள த.வெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 19ஆம் தேதி தொடங்கியது இதை அடுத்து நடப்பு நிதி ஆண்டுக்கான 2026 -2027 பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரம் 5ஆம் தேதி நடைபெறுகிறது அடுத்த நாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்ய பட உள்ளது.
இந்த பட்ஜெட்டில் த.வெ.க. கட்சியின் தேர்தல்வாக்குறுதிகளைநிறைவேற்றகூடிய அறிவிப்புகள் இடம் பெறுமா, அதில் தமிழக காவல்துறையின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அறிவிப்புகள் இடம் பெறுமா? த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா இல்லை, வெள்ளை அறிக்கை வெளியிட்ட அரசின் கடன் சுமையை சுட்டிக்காட்டி மக்களின் சுமையை அதிகரிக்குமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் ஜனநாயக திரைப்படத்தை பார்ப்பதற்கு நம்ம முதல்வர் விஜய்க்கு நேரமில்லை அதனால் நேற்றிரவு ஜனநாயகத்தை பார்த்து வந்திருக்கிறார் இனிமேல் தான் தமிழக பட்ஜெட்டை அவர் அலசி ஆராய்ந்து மக்களுக்கு இனிப்பான செய்தி வழங்குவாரா?
முதல்வர் விஜயின் ஆளுமைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த ஜனநாயக திரைப்படம் வெளியே வந்து விட்டது இனிமேல் சட்ட ஒழுங்கிற்கு கவலை இல்லை, தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறிவிடும் இனி அரிசி ஒரு கிலோ 30 ரூபாய் உயர்ந்து உள்ளது இன்றோடு விலை குறைந்து விடும் ,பெண்கள் பாதுகாப்புக்கு கவலையில்லை, சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு கவலையில்லை, போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழித்து விடலாம், இஜனநாயக பட வெளியிட்டது காரணமாக நாம் இந்தியாவிலே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறோம் . ஒரு திரைப்படத்தைக் கூட வெளியிட முடியாமல் முதல்வராகப் பிறகுதான் வெளியிட முடிகிறதா என்று யாரும் கேள்வி கேட்டால்அது ஜனநாயக விரோத செயல்.
தமிழகத்தில் அரிசி கிலோ 30 ரூபாய்க்கு உயர்ந்துவிட்டது, காவிரியில் தண்ணீர் விடாததால் டெல்டாவில் வறட்சித் தலைவிரித்து ஆடுகிறது, மேகதாது அணை பற்றி இருக்கிறது இதற்கெல்லாம் தீர்வு காணப்படவில்லை ஆனால் இந்த 80 நாட்களில் முதல்வர் விஜய் செய்த ஒரே சாதனை ஜனநாயகம் திரைப்படத்தை வெளியிட்டது தான் .எங்கே போகிறது தமிழகம் பொறுத்திருந்து பார்ப்போம். எனகூறினார்.




