• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jul 21, 2026

மதுரை மாநகர காவல் ஆணையர் S. இராஜேந்திரன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, விபத்தில்லா மதுரையை உருவாக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

19.07.2026 அன்று மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, 18 வயது பூர்த்தியடையாத இளஞ்சிறார்கள் இயக்கிய 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இளஞ்சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் /பாதுகாவலர்கள் /வாகன உரிமையாளர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை:

18 வயது பூர்த்தி அடையாத சிறார்கள் வாகனம் ஓட்டினால், மோட்டார் வாகனச்சட்டப் பிரிவு 199A-ன் படி, பெற்றோர் / வாகன உரிமையாளர்களுக்கு: 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ₹25,000 அபராதம் மற்றும் 1 ஆண்டுக்கு வாகனப் பதிவு ரத்து செய்யப்படும். ஓட்டுநருக்கு: உரிமம் இன்றி வாகனம் ஓட்டியதற்காக ₹5,000 அபராதம் விதிக்கப்படும். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்பதால், பொதுமக்கள் வாகன விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.