மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
எம்.வீ. கருப்பையா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதா வது:- இந்திய வரலாற்றில் கற்கால மனிதனுக்கு பிறகு தான் நாகரீகம் தோன்றியது அந்த நாகரிகத்தின் தோற்றம் சிந்து சமவெளியில் என்று தான் இதுவரை நம்பி இருந்தோம்.

ஆனால் தற்போது நாகரீகத்தின் முன்னோடி கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றி வாழ்ந்த மூத்த குடிமக்கள் வாழ்ந்த தமிழகம் தான் என்று தற்போது கீழடி,மனச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சி மூலம் தெரிய வருகிறது.அது போல் வரலாற்று புகழ்மிக்க பழமையும் தொன்மையும் வாய்ந்த நகரங்களில் மீனாட்சி அரசாலும் தூங்கா நகரம் மாமதுரை முதுமதுரை என்றால் அது மிகையாகாது. இந்த வீரமிக்க மண்ணில் சங்க காலத்தில்வாழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழிய மன்னரின் அலுவலர் கடலன் வழுதி என்பவர் கணி நந்தஸிரிய குவன் என்ற சமண துறவிக்கு மதுரை மாங்குளம் மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள குன்றுகளில் அமைத்து கொடுத்த கல் படுக்கைகள் இன்றளவும் வரலாற்று பொக்கிஷமாக இருந்து வருகிறது.
நாம் வாழும் காலத்தில் தமிழகத்தை ஆண்ட எத்தனையோ தமிழ் வளர்ச்சி தொல்லியல் துறை அமைச்சர்கள் இதுபோன்ற வரலாற்றுச் சான்றுகளை நேரில் வந்து பார்க்காததை நமது அமைச்சர் பன்முக திறமையாளர் அண்ணன் ராஜ்மோகன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாகமாற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை நான் நேரில் கண்டு கேட்டும் மகிழ்ச்சி அடைந்தேன். இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை தற்போது தமிழக வெற்றி கழக அரசு தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட சான்று வேறு வேண்டுமா, தேர்தலில் பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகம் வென்றிட மாற்றம் காணவிரும்பிய தமிழக மக்கள் நலனின் மீது அக்கறை கொண்டதமிழக முதல்வரின் ஆட்சி காலத்தில் இது போன்ற வரலாற்றுச் சான்றுகள் மீண்டும் உயிர் பெற்று இந்த மண்ணில் காற்றுள்ள வரை நிலைத்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. வந்தான் வாழ்ந்தான் மாண்டான் என்றில்லாமல் ஒவ்வொருவரும் தான் வாழும் காலத்தில் பொதுநலத்தோடு தன்பெயர் நிலைக்கும் படி தனித்துவத்தோடு அறப்பணி ஒன்றை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.




