• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழகம் த.வெ.க கையில் சிக்கி. குரங்கு கையில் கிடைத்த பூமாலைபோல உள்ளது-ஆர்.பி.உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Jul 18, 2026

அரசு நிர்வாகத்தில் தொடர் தடுமாற்றம் முதல்வர் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது இதனால் த.வெ‌க அரசு ஆட்சி சக்கரத்தை செலுத்த தடுமாறுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது

விஜய் பதவி ஏற்று 2 மாதங்கள் ஆகின்றன ஆனால் சமூக வலைதளங்களில் இப்படி ஒரு ரீல்ஸ், அப்படி ஒரு மீம்ஸ் என சமூக வலைதளங்களில் விஜய்யை மையமாக வைத்து பல்வேறு பதிவுகள் சில வாரங்களாக வேகமாக வீசி ,தேசிய அளவில் பல்வேறு மொழிகளில் அளவிலேயே பரவ வருகின்றன.

இதை பார்க்கிற போது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரவால் முதல்வராக பதவி ஏற்ற போது ஊழலை ஒழிக்க வந்த மகானாக இந்தியா முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டார் இவையெல்லாம் இயல்பாகவே நடந்தது இல்லை அவருக்குப் பின்னால் இருந்த அரசியல்வாதிகளின் இமேஜை வளர்த்தெடுக்கும் வியூக வகுப்பு நிறுவனங்கள் தான் இதையெல்லாம் செய்தன என்பது வெட்ட வெளிச்சமாக பின்னர் தெரியவந்தது.

முதல்வர் விஜய்க்கு அதுதான் நடந்து கொண்டிருக்கிறது ஊழலை ஒழிக்க வந்த மகாத்மாவின் அவதாரமாக விஜய் இங்கே தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வருகிறார். அவரைப் பற்றிய கதாநாயகன் பிம்பத்தை பெருக்கும் வகையில் மாயக்கதைகள் பலவும்,நடக்காத நிகழ்வுகள் பலவும் இன்ஸ்டால் மூலமும், மீம்ஸ் கிரியேட்டர்கள் மூலமும் இயல்பு மீறி இலக்கணத்தை மீறி தேசிய அளவிலே பரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன.

கட்டுக் கதைகளை மையமாக வைத்து விஜய்யை ஒரு பெரும் தலைவராக உருவாக்க பரப்பப்படும் போலி செய்திகளை உடைத்து எறிந்து விழிப்புணர்வு ஜென்சி தலைமைக்கு வருமா என்ற கேள்வி எழுந்திருக்கிற நிலையிலே, இன்றைக்கு தமிழகத்திற்கு இடைத்தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிப்பு இடம் பெறவில்லை. அதோடு நீதிமன்றத்தின் இடைத்தேர்தலுக்கு தடை என்று உத்தரவால் விஜயின் தனி மெஜாரிட்டி கனவு பகல் கனவாகவே தொடர்கிறது. அதோடு கூட்டணியிலே விசிக, காங்கிரஸ், இடதுசாரிகளின் கூட்டணி கட்சிகளின் தொடர் குடைச்சல்களால் அடுத்தடுத்து சிக்கல்களால் இதற்கு பதில் தான் என்ன தான் என்ன என முதல்வர் விஜய் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் .

இதற்கு ரீல்சிலும், மீம்சிலும் தீர்வு காண முடியாது என்பது விஜய்க்கு தெரியாது. அதோடு ஊழல் அமைச்சர்களையும் , அதிகாரிகளையும் கண்காணிப்பதற்கே ஒவ்வொரு நாளும் பெரிய அளவில் கஷ்டப்படுகிறார் முதல்வர் விஜய்.

அப்படி இருந்தும் 100 கோடி கோயில் சொத்து தனியாருக்கு தாரைவார்ப்பு தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது .அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக த.வெ‌.க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் தற்போதுஅவரைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார்கள். அதோடு மதுபான ஊழல் ,கனிம வள ஊழல், தொடர் மின்வெட்டு ,தொடர் சட்ட ஒழுங்கு சீர்கேடு ,பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி, போதை பொருள் நடமாட்டம், லாக்கப் டெத் மரணங்கள் என தொடர்வதை தடுக்க முடியவில்லை.

அதைவிட இன்றைக்கு திரைப்பட பிரமோஷன் விழாவில் மலையாள நடிகர் ஒருவர் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து கலவரமாக பேசியிருக்கிறார் .முதல்வர் விஜய்யின் பதவி ஏற்பு விழா குறித்து நகைச்சுவையாக நையாண்டி செய்கிறேன் என்ற நிலையிலே அவர் பேசியிருப்பது தமிழகத்திற்கே தலை முடிவை ஏற்படுத்தியிருப்பதை தன்மானம் உள்ள எந்த தமிழராலும் ஏற்றுக்கொள்ள முடியாது

இது முதல்வர் விஜய் மீது தான் என்பதை நாம் கடந்து போக முடியாது ஒட்டுமொத்த தமிழர்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை ஒற்றை வரியில் கிழி என்று கிழித்து தொங்கு விட்டுள்ளார் அந்த மலையாள நடிகர். என்ன செய்வது இதையும் பொறுத்துதான் போக வேண்டும்.

இப்படி தொடர் சர்ச்சைகள், விமர்சனங்கள் பொறுத்துக் கொள்ள முடியாததாலும், தவிர்க்க முடியாததாலும் ,எதிர் கொள்ள முடியாமலும் தொடர் மௌனம் காத்து வருகிறார் விஜய்.இதுபோன்ற தொடர் சங்கடங்களை எப்படி தவிர்ப்பது என ஆலோசித்த முதல்வர் விஜய்க்கு கிடைத்த யோசனை தான் மறு தேர்தலில் எதிர்கொள்ளும் திட்டம்.

அமைச்சரவையை ராஜினாமா செய்து விட்டு தமிழகத்தில் மீண்டும் தேர்தலில் சந்திக்க சட்ட சிக்கல் குறித்து சட்ட வல்லுனர்களோடு தீவிரமாக விவாதித்து வருகிறார் முதல்வர் விஜய்.

இந்த ராஜினாமா முடிவுக்கு முன் உதரணமாக விஜய்க்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளவர் யார் என்று தெரியுமா அரவிந்த் கெஜ்ரவால் தான்

ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி 2013 ஆண்டில் டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றார் ,அவர் முதல்வரான உடன் ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கு ஆதரவை திரட்ட முடியாமல் தடுமாறுகிற போது தொடர்ந்து 49 நாளில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு பிறகு 2015ல் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்து முதல்வராக பதவியேற்ற அதே பார்முலாவை தமிழகத்திலும் அமல்படுத்தினால் மீண்டும் விஜய் முதல்வராவது உறுதி ,பெருன்பான்மை கிடைப்பது உறுதி என்று ஆதாரத்தோடு, முன் உதாரணத்தோடு விஜய்க்கு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளது.

பெரும்பான்மை இல்லாததால் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகளை பாருங்கள், நிதிநிலை நெருக்கடி உள்ள காரணங்களை பாருங்கள் என்று மக்களிடத்திலே அனுதாபத்தை உருவாக்கி, அந்த அனுதாபத்தை முன்னிறுத்தி முதல்வர் விஜய் தன் பதவியில் இருந்து விலகி தேர்தலை சந்தித்தால் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள் விஜயின் பவர் சென்றர்களான மூவர் அணியான பழனிச்சாமி ,ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர்.

இதனால் த.வெ‌.கஅரசு ராஜினாமா முடிவு குறித்து முதல் விஜய் தீவிரமாக பரிசீரித்து வருவதாகவே செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. எது எப்படியோ விஜய் சவால்களை சந்திக்க முடியாமல், எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக ரீல் போடுவது, மீம்ஸ் போடுவது ,கிரியேட்டர்களை வைத்துக்கொண்டு கண்டன் கிரியேட்டிவ் செய்வதை தவிர வேறு ஒன்றும் தமிழகத்தில் துரும்பை கூட அசைக்கவில்லை இந்த த.வெ.க அரசின் 75 நாட்களில்.

ஆகவே த.வெ‌.க கட்சி மறு தேர்தலுக்கான மைண்ட் செட்டிற்கு வந்துவிட்டதால் விஜய்யின் தலைமையிலான த.வெ‌க அரசினுடைய ஸ்திரத்தன்மையால் அரசு அதிகாரியிடத்திலும் ,மக்களிடத்தில் கேள்விக்குறியாகி விட்டதால் அரசு நிர்வாகம் தள்ளாட்டத்திலே ஊசலாடிக் கொண்டிருப்பதால் அரசு அதிகாரிகள் கொத்து ,கொத்தாக 5 நாட்களுக்கு ஒரு முறை நேற்று மாற்றம், இன்று மாற்றம் என இடமாற்ற போடுகிறார்கள்

இதனால் குரங்கு கையில் கிடைத்த பூமாலையா இந்த த.வெ.க அரசு நிர்வாகம் என்று அதிகாரம் வேதனையோடு பேசிக் கொள்கிற செய்தியும் வெளியே வருகிறது. அரசு நிர்வாகத்தில் இன்றைக்கு ஸ்திரத்தன்மை இல்லாமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது அடுத்தடுத்து என்ன நடக்குமோ தமிழ்நாட்டிலும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கூறினார்.