விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் எம் ஆர் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தளவாய்புரம் பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இவரும் பக்கத்து வீட்டுக்காரர்களும் குற்றாலம் சென்று நிலையில் இவரது அம்மா திருநெல்வேலியில் வசித்து வரும் மற்றொரு மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
திருநெல்வேலி சென்று திரும்பி பிரபாகரனின் தாயார் வீட்டின் வெளியில் உள்ள இரும்பு கதவு திறந்த தலைவாசல் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்து படுக்கை அறைக்கு சென்று பார்த்த பொழுது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 75 பவுன் தங்க நகை 252 கிராம் வெள்ளி மற்றும் 33,000 ரொக்க பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சடைந்து தன் மகனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பிரபாகரன் தளவாய்புரம் காவல்நிலத்தில் புகார் அளித்துள்ளார் புகாரைத் தொடர்ந்து தளவாய்புரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குருவுத்தாய் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் குழு தீவிரமாக தேடி தளவாய்புரம் கொம்தாபுரம் தெருவை சேர்ந்த வீரபத்திரன் மகன் வீரமணி வயது 22 இமானுவேல் நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சிவா வயது 21 ஆகிய இருவரையும் கைது செய்து இவர்களிடம் இருந்து திருத்தப்பட்ட 75 பவுன் நகை 252 கிராம் வெள்ளி மற்றும் ரொக்க பணம்
33 000ஆயிரத்து பறிமுதல் செய்து இவர்கள் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.





