• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி.,ஆறு பேர் படுகாயம்…

ByRadhakrishnan Thangaraj

Jul 13, 2026

விருதுநகர் மாவட் Lம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வத்திராயிருப்பை சேர்ந்த சேர்வை என்பவர் தனது குடும்பத்தினர் ஒன்பது பேருடன் காரில் கல்லுப்பட்டி அருகே உள்ள மருதங்குடி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

காரை பூபதி ஓட்டிச் சென்றுள்ளார்.வழிபாடு நடத்திவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போது நத்தம்பட்டி பாலத்தின் மீது கார் எதிர்பாராத விதமாக அதிக வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பூபதி மற்றும் கார்த்தி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் வந்த அங்காள ஈஸ்வரி என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

மேலும் காரில் உடன் வந்த சேர்வை, வீரலட்சுமி,தனலட்சுமி, காவியா,அஸ்வின், மற்றும் லட்சுமி ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து நத்தம் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.