புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் காயாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் SMC கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர், SMC உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் தலைமை அறங்காவலர் சார்பில்
1.நம் பள்ளியில் படிக்கும் லக்க்ஷனா(2std) இவர்களின் பெற்றோர் கீழகாயாம்பட்டி திருமதி இந்திராணிகுமார் அவர்களின் முயற்சியால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள் அறக்கட்டளை தலைமை அறங்காவலர் மு.செல்லையா செல்லையா கலந்து கொண்டார். அப்போது அப்பள்ளியின் வளாகத்தில் மாணவ மாணவியர் பயன்படுத்தும் கழிவறைக்குச் செய்ய வேண்டிய புனரமைப்பு பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை தனது சொந்த செலவில் அவர் செய்து கொடுத்தார்.

மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருவதால் உரிய நேரத்துக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும் அதற்கு முன் முயற்சி எடுக்காமலும் இருந்த நிலையில் ஆசிரியர்களும் மற்றவர்களும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பேரில் கடந்த ஜூன் மாதத்தில் தவறாமல் வருகை புரிந்த 17 மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் மற்ற மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்கிற அக்கறையை ஏற்படுத்துகிற விதமாகவும் செல்லையா அவர்கள் ஊக்கப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

அதேபோல் கடந்த ஆண்டு இப்பள்ளியில் பயின்ற மாணவர்களில் இரண்டாம் வகுப்பு மாணவி மு.பிரக்யா களிமண் பொம்மைகள் செய்வதில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் முதல் பரிசு பெற்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக அவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
இவற்றையெல்லாம் பார்த்த அந்தப் பள்ளியில் பயிலும் மாணவியின் பெற்றோரான அதே ஊரைச் சேர்ந்த இந்திராணி குமார் தம்பதியினர் பள்ளி வளாகத்தை மட்டுமல்லாது சுற்றுப்புறத்தையும் ஜேசிபி இயந்திர வண்டி கொண்டு சுத்தம் செய்ததோடு இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

அதே நிகழ்வில் சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் வாகனங்களின் அதிக போக்குவரத்தால் ஏற்படும் பாதிப்புகள், விபத்துகள் அவற்றிலிருந்து தப்பிக்கும் விதங்கள் குறித்து விளக்கிப் பேசினார். மேலும் காயாம்பட்டி உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த S.கனிகாஸ்ரீ அவர்களை அழைத்து வந்து அந்த மாணவிக்கு SMC சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.




