• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மின் வயர்கள் உரசல் ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு..,

ByP.Thangapandi

Jul 11, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.,

இந்த கிராமத்தின் அருகில் சிமெண்ட் மின்கம்பம் நடுவில் துண்டாகி கம்பிகள் வெளியில் தெரியபடி சிதலமடைந்து விழும் ஆபாத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.,
மேலும் இந்த மின் கம்பம் மூன்று பிரிவாக மின் வயர்கள் செல்கின்றன. இதில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதாகவும் காற்றுக்கு மின் வயர்கள் உரசல் ஏற்பட்டு கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், இப்பகுதியில் செல்வோர் ஆபத்தான நிலையில் சென்று வருவதாக கூறப்படுகிறது.,

இது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.,

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு தாழ்வாக செல்லும் மின் வயர்களை மரக்குச்சியை வைத்து மின்வயர்கள் உரசாத வண்ணம் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது .,

விபத்து ஏதும் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து சிதிலமடைந்தும், சாய்ந்த நிலையிலும் உள்ள மின் கம்பத்தையும் தாழ்வாக சொல்லும் மின் வர்களையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.,