• Sun. Jul 5th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

பாலங்களில் முந்தி செல்வதால் விபத்துக்களை தடுக்க போக்குவரத்து காவல்துறை புதிய ஏற்பாடு..,

ByKalamegam Viswanathan

Jul 5, 2026

நாளுக்கு நாள் அதிகரித்து விபத்துகளால் காயமடைந்து சில விபத்தில் உயிரும் இழக்க ஏற்படுகிறது குறிப்பாக பாலங்களில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வருவது எதிரே வரும் வாகனத்தில் மீது கடுமையாக மோதுவதாலே விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.

இதை தடுக்கும் நோக்கில் மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி புதுமையான யுத்தியை ஒன்றை கையில் எடுத்தார் அதாவது பாலத்தில் தடுப்புகள் ஏதும் வைக்க முடியாது. அதனால் உளிரும் வகையில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பைப்பு போன்ற டிவைடர் தேசிய நெடுஞ்சாலைத்துறை உடன் இணைந்து தேவர் பாலம் மற்றும் முத்து பாலம் இரண்டு நடுவில் யாரும் முந்தி செல்லாத அளவிற்கு தடுப்பு அமைக்கப்பட்டு விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கையில் முன்னெடுத்துள்ளார். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுபோன்று அனைத்து பகுதிகளும் வைக்க வேண்டும் எனவும் இதனால் விபத்துகளில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படுவதையும் அதை தடுக்க முடியும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணியின் செயல்பாடு மிகுந்த பாராட்டவில்லை பெற்று வருகிறது