மாணவர்களே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வைக்கும் என் எஸ் எஸ் அமைப்பை நான் பாராட்டுகிறேன் என முதன்மை கல்வி அதிகாரி நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு பேசினார்.

திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் என். எஸ். எஸ். திட்ட ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட என்.எஸ்.எஸ். தொடர்பு அலுவலர் சௌந்தரராஜ் தலைமை வகித்தார். மூத்த திட்ட அலுவலர் சேதுராமன்,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் சுரேஷ்பாபு கூட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
நாம் பல யுகங்கள் கடந்து வந்துள்ளோம். தற்போது நடப்பது கலியுகம். இதில் 25 சதவீதம் தான் நல்லவர்கள் உள்ளனர். 75 சதவீதம் தீமையான எண்ணம் கொண்டவர்களாக உள்ளனர்.
இவர்களின் நல்லவர்களாக மாற்றும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. இப்போதுள்ள குழந்தைகள் மூளை வீக்கம் உள்ளவர்களாகவும். இதயம் சுருக்கம் உள்ளவர்களாகவும் உள்ளனர். தன் பெற்றோரை எந்த குழந்தை பேணவில்லையோ, அந்த குழந்தையை நாம் நல்ல குழந்தையாக ஏற்றுக் கொள்ள முடியாது. நமது சமுதாயத்தில் இதயம் சுருங்கிய மனம் உள்ள குழந்தைகளையும், நாம் என்.எஸ்.எஸ். முகாமில் சேர்த்து சேவை மனப்பான்மை உள்ளவர்களாக மாற்றி வருகிறோம். நமது குழந்தைகள் நாட்டுக்கு சேவை உள்ளவர்களாக மாற்றும் பொறுப்பு நமது என் எஸ் எஸ் ஆசிரியர்களிடம் உள்ளது. எனவே நான் உங்களை பாராட்டுகிறேன்.

மனிதநேயத்தை நமது குழந்தைகளிடம் வளர்ப்பது மட்டும் இல்லாமல், சேவை மனப்பான்மையும் அவர்களுக்கு ஊட்டி,பெருமைப்படுத்துகிறீர்கள். இந்த பணி தொடரட்டும். என்றார். மாவட்ட என் எஸ் எஸ் தொடர்பு அலுவலர் சௌந்தரராஜ் பேசியதாவது:
என் எஸ் எஸ் திட்டப் பணியில்,திண்டுக்கல் மாவட்டம் மாநிலத்தில் நம்பர் ஒன்னாக உள்ளது. அதற்குக் காரணம் நமது என். எஸ். எஸ் திட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள்தான். மாவட்ட கல்வி அதிகாரி நமக்கு நல்ல யோசனைகளை தெரிவித்தார். அவரின் முயற்சியால் நாம் பல வெற்றிகளை பெற்றோம். அதுபோல கலெக்டர் அவர்களும் என் எஸ் எஸ் திட்ட பணிகளை ஊக்குவித்து வருகிறார்.
போதைப்பொருள் தடுப்பு ஊர்வலம், சாலை பாதுகாப்பு ஊர்வலம் உட்பட பல பணிகளை நாம் செய்ய வேண்டியது உள்ளது. நிறைய சேஷ்டை செய்யும் மாணவர்களை நாம் என். எஸ் .எஸ். முகாமில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களை நாம் திருத்த முடியும். சேஷ்டை செய்யும் மாணவர்களின் குற்றவாளி என்று நாம் முடிவு செய்யக்கூடாது. அவர்களை மனிதநேயம் உள்ளவர்களாக நாம் மாற்ற வேண்டும். பெண் குழந்தைகளை நாம் நன்றாக கவனிக்க வேண்டும். அவர்கள் எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். என்.எஸ்.எஸ் முகாம்களை தொடர்ந்து நாம் நடத்தும் போது மாணவர்கள் விழிப்புணர்வு கொள்கின்றார்கள். சமுதாயத்தோடு மாணவர்கள் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கு அனைத்து என்.எஸ்.எஸ். ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மூத்த என்.எஸ்.எஸ்.அதிகாரி செல்வராஜ் நன்றி கூறினார்





