மதுரை மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் மாநகராட்சிக்கு குப்பை எடுப்பதற்கு தனியார் ஒப்பந்த வாகனம் மூலமாகவே குப்பைகளை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு டாரஸ் குப்பை எடுக்கும் லாரியில் குப்பையைக் காட்டிலும் அதிக அளவு மணல் இருந்ததால் அப்பகுதி மக்கள் இரண்டு லாரிகளையும் சிறை பிடித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சுகாதார ஆய்வாளரிடம் கேட்ட பொழுது இது சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மணல் எனவும் கடத்தல் ஏதும் நடக்கவில்லை எனவும் தெரிவித்தனர். அப்படி என்றால் ஏன் அதிக அளவுக்கு குப்பையை காட்டிலும் மணல் இருப்பதற்கு காரணம் என்ன எடையை கூட்டி காட்டவா மணலை அதில் வைத்து மேலே குப்பையை கொட்டி விட்டார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றன.

மணல்தான் கடத்தப்பட்டதா என புரியாத புதிதாக உள்ளது இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களில் கடும் நடவடிக்கை எடுக்கவும் எனவும் இடையைக் கூட்டி காட்டுவதற்காக மணலை அதில் சென்றார்களா எனவும் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுகின்றனர். மேலும் இது சம்பந்தமாக திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



