புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனி திருவிழா இன்று இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி நாளை மறு தினம் 29ஆம் தேதி மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிச்சாண்டு மூர்த்தி வீதி உலாவில் மாம்பழம் இரைத்தல் நிகழ்வை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்காக டன் கணக்கில் மாம்பழங்கள் பல்வேறு பழக்கடைகளுக்கு இறக்குமதியாகியுள்ளது.

இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பழக்கடைகளில் மாங்கனி திருவிழாவிற்காக விற்கப்படும் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது ரசாயனம் மூலம் பழங்கள் பழுக்க வைக்க படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரசாயனம் மூலம் பழங்கள் பழுக்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.



