மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், கருங்காலக்குடி அருகே உள்ளது பெரியகற்பூரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள சேக்கிபட்டி, கம்பூர், கருங்காலக்குடி ஆகிய ஊர்களில் இருக்கும் அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

நத்தத்தில் இருந்து கருங்காலக்குடிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தையே இந்த மாணவர்கள் முழுமையாக நம்பி பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இந்தப் பேருந்து குறித்த கால அட்டவணைப் படி இயக்கப்படுவதில்லை. இன்னும் சில நாட்களில் இந்தப் பேருந்து முற்றாக இயக்கப்படுவதும் இல்லை என்ற குற்றச்சாட்டு இந்தப் பகுதி மாணவர்களிடையே இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று (25/06/2026) காலை சரியான நேரத்தில் பேருந்து வராததால், சேக்கிபட்டிக்குச் செல்லும் மாணவர்கள நடந்தே சென்றுவிட்டனர். மேலும் கருங்காலக்குடி மற்றும் கம்பூர் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் தாமதமாக வந்த அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.




