• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

Byமுகமதி

Jun 25, 2026

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மத்தியில் ஆளும் மக்கள் விரோத பா ஜ க அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக மாணவர்களை பாதிக்கும் வகையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் தேர்வுகள் ரத்து செய்யப்படுதல் பணியாளர்கள் ஆட்சேர்ப்பில் தாமதம் வேலை வாய்ப்பின்மை கல்வி அமைப்பின் கட்டமைப்பு குறைபாடுகள் மாணவர்கள் தற்கொலை மற்றும் நீட் தேர்வுக் குளறுபடிகளுக்குக் காரணமான ஒன்றிய பா ஜ க அரசையும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைக் கண்டித்தும் இதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் இளைஞர்களின் பிரச்சனைகள் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.

தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி MP அவர்கள் பங்கேற்று நடைபெற்ற பிரமாண்டமான மாணவர்கள் பேரணி விளக்க காட்சிகள் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் செய்யும் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பேச்சாளர் குமரி மகாதேவன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி

முன்னாள் தலைவர் ஆலங்குடி தமிழ்ச்செல்வன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் வேங்கை அருணாசலம், பழனிசாமி பாலாண்டார், எம் ஏ எம் தீன், செம்பாட்டூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செம்பை மணி, சிவக்குமார், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவர் பாருக் ஜெய்லானி, வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சூர்யா பழனியப்பன், மாமன்ற உறுப்பினர் ராஜா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட கலைப் பிரிவு தலைவர் மேப் வீரையா நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் திருவப்பூர் மணி ஆறுமுகம் நாச்சிமுத்து அனீஸ் ரஹ்மான் ஜமீல் காதர் அன்னவாசல் செல்வராஜ் திருக்கட்டளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயபாலன் மாவட்ட ஓபிசி அணி தலைவர் ஆனந்தன் மகளிர் அணி தலைவர் கவுரி சகாய ராஜ் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.