தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தனியார் மண்டபத்தில் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கட்டுரை போட்டி,ஓவிய போட்டி, பேச்சு போட்டி என எண்ணற்ற போட்டகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்னை சந்திக்க வருபவர்கள் எவரும் சால்வை எடுத்து வர வேண்டாம். பேனா பென்சில் போன்ற உபயோக பொருட்கள் எடுத்து வரவும் என்றார். மேலும் நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என்றும் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் கட்சியினருக்கு அறிவுறுத்தினார். தமிழக முதல்வர் ஆட்சியில் கம்பம் சட்டமன்றத்தை முன்மாதிரியான சட்டமன்றமாக உருவாக்குவோம் என்றார்.மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கிய பின்னர் அனைவரிடமும் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.




