• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்..,

ByK Kaliraj

Jun 21, 2026

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் திரு.K.S.சண்முகக்கனி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஊழியர் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புரட்சி தலைவர் – புரட்சி தலைவி ஆகியோரின் வழியில் பயணிக்கும் நமது கழகப் பொதுச் செயலாளர், புரட்சி தமிழர் மாண்புமிகு ஐயா.எடப்பாடியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆலோசனை வழங்கப்பட்டது.

மேற்கொண்டு நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், இன்றைய இளைஞர்கள் – இளம்பெண்கள், மக்களை எளிதாக மடை மாற்றம் செய்யும் சில கட்சிகளின் உண்மை முகத்திரையை அவர்களை போலவே கொண்டு செல்ல வேண்டும் என்று பங்கேற்ற நிர்வாகிகளிடம் அறிவுருத்தியதோடு,

எதிர் வரும் உள்ளாட்சி தேர்தல்களில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்,கிளை கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.