• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில் 480 மாணவர்களுக்கான தேர்வு மையம் தயார்..,

ByKalamegam Viswanathan

Jun 21, 2026

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி இரண்டில் நீட் தேர்வுக்கான மையம் ஒதுக்கப்பட்டுள்ளது .

இந்த நீட் இளநிலை மறுதேர்வு மையத்தில் 480 மாணவர்கள் நீட் மறு தேர்வு எழுத உள்ளனர்

திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி எண் இரண்டில் உள்ள பொறுப்பு ஆசிரியர் மோகன் மாணவர்கள் தேர்வு குறித்து பதட்டம் அடைய வேண்டாம் நிதானமாக தேர்வு எழுதவும் நீட் இளநிலை மருத்துவ தேர்வு மாணவர்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள் எனக் கூறிய மாணவர்களுக்கு உற்சாகப்படுத்தினார்

மேலும் தேர்வு மையத்தில் செல்போன் நகைகள் ஷூ சாக்ஸ் ஹெட் போன் கால்குலேட்டர் உள்ளிட்ட 13 பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளை வெளிப்படுத்தினர் .

தேர்வு விதிமுறைகள் குறித்த பதாகைகள் மூலமாகவும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது

கடந்த ஜூன் மாதம் 3ம் தேதிநடைபெற்ற நீட் மருத்துவ மாணவர்களுக்கான இளநிலை தேர்வில் பல்வேறு குளறுபடிகள் எழுந்தது.

நீட் வினாத்தாள் வெளியாகி கசிந்த நிலையில் தேசமெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகாமை நீட் மருத்துவ இளநிலை தேர்வு ரத்து செய்து மறு தேர்வு நடத்த உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இன்று மே 21 ஆம் தேதி நாடு முழுவதும் நீர் மருத்துவ மாணவர்களுக்கான இளநிலை தேர்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது

அதனை தொடர்ந்து வினாத்தாள்கள் பாதுகாப்பாக ராணுவ விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது .

தேர்வு நடைபெறும் மையங்களுக்கு வெளியே மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி குடிநீர் வசதி செய்யப்பட்டது. மேலும் 11 மணி முதல் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் சோதனை செய்து தேர்வு எழுதும் மையத்திற்குள்ளே அனுமதிக்கப்பட்டனர்.