தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து இன்று மாலை 6 மணி அளவில்TN72N2458 என் கொண்ட பேருந்து ஆனது மதுரை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது பெறப்பட்ட சில நிமிடங்களில் உள்ளே விளக்குகள் எரியவில்லை.

மேலும் சாரல் மழை அடித்துக் கொண்டிருந்ததால் பைபர் ஒர்க் ஆகவில்லை இதனால் பயணிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது ஓட்டுநர் மற்றும் நலத்துடன் இது குறித்து கேள்வி எழுப்பிய போது தூத்துக்குடி அரசு போக்குவரத்து டிப்போவிற்கு கொண்டு சென்று வண்டியை நிப்பாட்டினார்கள். ஆனால் அங்கே வேலை செய்ய போதிய ஆட்கள் இல்லாததால் மதுரையோ அல்லது அருப்புக்கோட்டையில் கொண்டி பார்த்துக் கொள்ளுங்கள் என அனுப்பி விட்டார்கள் என தகவல் தெரிவித்தனர்.

எனினும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கொட்டும் மலையில் வைபர் ஒர்க் ஆகாத நிலையில் வாகனத்தை ஓட்டுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுனிடம் இது குறித்து கேட்ட பொழுது இல்லை நான் பார்த்து ஓட்டி விடுவேன் 50 பேருக்கு மாற்றுவதற்கு என்னிடம் அங்கே பேருந்து இல்லை எனவும் நான் மெதுவாக ஓட்டி விடுகிறேன் என தகவல் தெரிவிக்கிறார் என்ன எப்படியோ உருப்படியாக ஊர் போய் சேர்ந்தால் போதும் என பயணிகள் அச்சத்துடனே பேருந்தில் பயணிக்கிறார்கள்.




