• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தங்கமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

ByRadhakrishnan Thangaraj

Jun 18, 2026

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே தெற்குவெங்காநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகரில் அமைந்துள்ள தங்க மாரியம்மன் திருக்கோவில் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை முதல் யாகசாலை சிறப்பு பூஜைகள் தொடங்கியது.

அதனை தொடர்ந்து காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோபூஜை, கஜ பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோபுரத்திற்கு கும்ப கலசத்தில் நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் தங்க மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உட்பட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாரியம்மன் பொதுமக்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டை தலைவர் ஆறுமுகம், துணைத்தலைவர் கணேசன், செயலாளர் செந்தில்வேல் தலைமையில் கும்பாபிஷேக விழாக்கமிட்டியார் செய்திருந்தனர்.