ரயிலில் இருந்து கீழே இறங்கிய வட இந்திய பயணி குடும்பம் ரயில் கிளம்பிய போது ஏற முயன்ற போது தடுத்து நிறுத்திய மற்ற பயணிகள் உடன் சென்ற அவர்கள் செயினை பிடித்து நடுவழியில் நின்று இழுத்ததால் 10 நிமிடம் தாமதம் தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் வழக்கம் போல மூன்றாவது நடைமேடைக்கு நேற்று இரவு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தது குடும்பத்தினர்
உணவு வாங்குவதற்காக குழந்தையுடன் கீழே இறங்கி உள்ளனர்.

உடைமைகளை உள்ளே வைத்து இருந்து இதனை கவனிக்காத அந்த ரயில் புறப்படுவதை அறிந்தவுடன் பதற்றத்துடன் ஏற முயற்பட்டபோது அருகில் இருந்த மற்ற பயணிகள் அவரை தடுத்து நிறுத்தினர். வண்டி சென்று பிளாட்பாரத்தை கடந்த பின் உள்ளே இருந்த உறவினர்கள் செயினை பிடித்து இழுத்ததால் ரயில் சுமார் பத்து நிமிடம் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தின் கடைசியில் போய் நின்றது. உடனடியாக ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் போய் விசாரித்த பொழுது அவர்கள் ரயில்வே ஊழியர்கள் என தெரிய வந்தது.

குழுவாக வட இந்தியாவில் இருந்து வந்ததாகவும் இதில் ஒரு குடும்பம் கீழே இறங்கி உணவு வாங்குவதற்காக இறங்கியதும் தெரிய வந்தது எனும் ரயில்வே போலீசார் அவர்கள் தொலைபேசி எண் மற்றும் பெயர்களை வாங்கி வண்டியை செயின் லாக்கை எடுத்து பின் மதுரை ரயிலை அனுப்பி வைத்தார் 15 நிமிடம் பரபரப்பை காணப்பட்டது.




