மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய்தீர்வாயம் ஜமாபந்தி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதுபோல் வாடிப்பட்டி தாலூகாவில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி என 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் உள்ள 7 உள்வட்டங்களில் 77வருவாய்கிராமங்களின் கணக்கு தணிக்கை ஆய்வு செய்தும் பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்கள் பெற்று உரியஆவணங்கள் உள்ளவைகளுக்கு உடனடி தீர்வு செய்து நலத்திட்டங்கள் வழங்கப்படுவது வழக்கம்.

வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் 16ந்தேதி செவ்வாய் நேற்று காலை 10மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் தலைமையில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி தொடங்கியது. தாசில்தார் ராமச்சந்திரன்,சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பஞ்சாட்சரம், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தலைமை இடத்து துணை தாசில்தார் மௌட்பேட்டன், வருவாய் ஆய்வாளர்கள் ராமன்,கௌதம் குமார் ராஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

முதல்நாள்நேற்று தென்கரை உள்வட்டத்தை சேர்ந்த அயன்தென்கரைகுரூப், கோவில்தென்கரைகுரூப், முள்ளிப்பள்ளம், கருப்பட்டி, நாச்சிகுளம், இரும்பாடி, அயன்குருவித்துறை குரூப், கோவில்குருவித்துறைகுரூப், மேலக்கால்குரூப், கச்சிராயிருப்புகுரூப், மன்னாடிமங்கலம், இரண்டாம்நாள் 17ந்தேதி புதன்கிழமை சோழவந்தான் உள்வட்டத்தை சேர்ந்த திருமால்நத்தம், நெடுங்குளம், திருவேடகம், சித்தலாங்குடி,திருவாலவாயநல்லுhர், நகரிகுரூப், தட்டான்குளம், சேலைக்குறிச்சி, பேட்டை, சோழவந்தான், மூன்றாம்நாள் 18ந்தேதி வியாழக்கிழமை தனிச்சியம் உள்வட்டம் சின்னஇலந்தைக்குளம்குரூப், அமரடக்கி குரூப், கொண்டையன்பட்டி, தனிச்சியம், சம்பக்குளம், கள்வேலிப்பட்டி, பெரியஇளந்தைக்குளம் குரூப், கட்டிமேய்க்கிப்பட்டி குரூப், கீழக்கரை குரூப், நான்காம்நாள் 19ந்தேதி வள்ளிக்கிழமை அலங்காநல்லுhர் உள்வட்டம் அழகாபுரி, தண்டலை குரூப், மணியஞ்சி குரூப், குமாரம் குரூப், அலங்காநல்லுhர், அச்சம்பட்டி, இலவன்குளம், பண்ணைக்குடி, கல்லணை, வாவிடமருதுhர், பரளி, ஐந்தாம் நாள் 23ந்தேதி செவ்வாய்கிழமை பாலமேடு உள்வட்டம் வலையபட்டி, சத்தரவௌ;ளாளபட்டி, மேட்டுப்பட்டி, இராஜக்காள்பட்டி குரூப், கிருஷ்ணாபுரம் குரூப், கோணப்பட்டி குரூப், இராமக்கவுண்டன்பட்டி குரூப், செம்பட்டி குரூப், சேந்தமங்கலம், தெத்துhர், பாலமேடு, ஆறாம்நாள் 24ந்தேதி புதன்கிழமை முடுவார்பட்டி உள்வட்டம் முடுவார்பட்டி, ஆதனுhர், கீழச்சின்னம்பட்டி குரூப்,

சுக்காம்பட்டி குரூப், கோடாங்கிபட்டி குரூப், பாரைப்பட்டி குரூப், சரந்தாங்கி குரூப், வள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி, தேவசேரி, அய்யூர், ஊர்சேரி, அ.கோவில்பட்டி குரூப், வைகாசிப்பட்டி குரூப், எர்ரம்பட்டி, ஏழாம்நாள் 25ந்தேதி வியாழக்கிழமை நீரேத்தான் உள்வட்டம் டி.ஆண்டிபட்டி, தும்பிச்சம்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, கட்டக்குளம், நீரேத்தான், தாதம்பட்டி, ஜாரிவிராலிப்பட்டி, குலசேகரன்கோட்டை, கச்சைகட்டி, போடிநாயக்கன்பட்டி ஆகியவையாகும். இந்த 7நாட்கள் நடத்தப்படும் ஜாமபந்தியில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில்கொடுத்து பயனடையவேண்டும் என்று வாடிப்பட்டி தாசில்தார் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.




