விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டம் முத்துசாமிபுரம் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பாக விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவினை கட்டுபடுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் நடைபெற்றது.

இப்ப பயிற்சியில் முத்துச்சாமிபுரம், குண்டாயிருப்பு, பாறைப்பட்டி, ஆகிய கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் முத்தையா தலைமை ஆற்றினார். மேலும் வேளாண்மை அறிவியல் நிலையம் கோவிலாங்குளத்திலிருந்து பூச்சிகள் துறை வல்லுநர் சடா கவிதா மக்காச்சோளம் படைப்புழு கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் பற்றி எடுத்துரைத்தார். இதில் கோடை உழவு செய்தல், கடைசி உழவின் போது ஒரு ஹெக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
மேலும் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிரில் வரப்பு பயிராக தட்டைப்பயிறு, எள், துவரை,சூரியகாந்தி போன்ற பயிர்களை பயிரிடவும் மேலும் ஒரு ஹெக்டருக்கு 12 எண்ணம் அளவில் ப இனக்கவர்ச்சி பொறிகளை அமைக்க வேண்டும். பயிர் விதைத்த 15 முதல் 20 நாட்களுக்கு பிறகு அசடிராக்டின் மருந்தினை ஒரு ஹெக்டருக்கு 2.5 லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். மேலும் மெட்டாரைசியம் அணிசோபிள்ளை 2.5 கிலோ ஒரு ஹெக்டர் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் மக்காச்சோள படைப்புழு கட்டுப்படுத்துதல் தொடர்பாக எடுத்துரைத்தார்.
மேலும் இப் பயிற்சிக்கு சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட வேளாண்மைதுறை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) நாச்சியாரம்மாள் கலந்துகொண்டு விளை நிலம் காப்போம் எனும் மத்திய அரசின் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் விளைநிலங்கள் காப்பது தொடர்பாக விவசாயிகள் அனைவரும் இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லி, பூஞ்சானங்க கொல்லிகள், இயற்கை ஒட்டுண்ணிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். மேலும் மண்புழு உரம், மீன் அமிலம் மற்றும் பஞ்சகாவியா போன்ற இயற்கை இடுபொருட்கள் தயார் செய்வது தொடர்பாக பயிற்சி அளித்தார்.
மேலும் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக துணை வேளாண்மை அலுவலர் சேர்மன் உயிர் உரங்கள்,உயிர் பூஞ்சான கொல்லிகள்,மற்றும் விதை நேர்த்தி செய்து விதைத்தல்,போன்ற தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் மாரியப்பன் பி .எம். கிஷான் கெளரவ நிதி பெற விவசாயிகள் அடையாள அட்டை பெறுவது கட்டாயம் எனவும் அதற்கான வழிமுறைகள் தொடர்பாக எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெருமாள் சாமி மற்றும் உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள் சுரேஷ் மற்றும் மாரிராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.




