திண்டுக்கல்லில் நாளை 13-ம் தேதி மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் முதல் செய்யப்பட்ட 75 வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள், 66 டூவீலர்கள் என மொத்தம் 75 வாகனங்கள் நாளை மறுநாள் ஜூன் 13ஆம் தேதி சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.

பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நாளை ஜூன் 12-ம் தேதி மாலை 6 மணிக்குள் திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5000, மூன்று, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தி பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.




