• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

இமயம் பாரதிராஜா மறைவு – அச்சு டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு இரங்கல்..!

Byஜெ.துரை

Jun 10, 2026

இயக்குனர் இமயம், பத்மஶ்ரீ பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

அவரது மறைவிற்கு சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா மறைவை முன்னிட்டு தமிழ்நாடு அச்சு மற்றும் டிஜிட்டல் செய்தி – வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு தலைவர் சமரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்,வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

தமிழ் திரைப்பட உலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரும், கிராமிய வாழ்க்கைலயயும் மனித உணர்வுகளையும் இயல்பாக திரையில் பதிவு செய்து தமிழ் சினிமாவிற்கு தனித்த அடையாளம். உருவாக்கியவருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.

அவாது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு தமிழ்நாடு பிரிண்ட் மற்றும் டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் பெடரேஷன் (TNPDNPF) சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.