• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

செல்வ சக்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Jun 5, 2026

மதுரை அவனியாபுரம் காமராஜ் நகரில் உள்ள செல்வ சக்தி விநாயகர் திருக்கோவிலில் அஷ்டமந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

2 நாள்கள் யாக சாலை பூஜைகளுடன் செல்வ விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷே நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

அவனியாபுரம் காமராஜ் நகர் அன்பாலயத்தில் உள்ள அருள்மிகு செல்வ சக்தி விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது முன்னதாக கடந்த மூன்றாம் தேதி காலை 10 மணிக்குஊர்வலம் ஸ்ரீ அணுக்கை பூஜை விக்னேஸ்வர பூஜை புண்ணிய ஆவாசனம் கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் கோபூஜை தன பூஜை எந்திர பூஜைகள் நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு மேல் ஸ்ரீ வாசு சாந்தி விக்னேஸ்வர பூஜை கும்ப அலங்காரம் கலா கரிசனம் யாகசாலை பிரவேசம் பூர்ணாவதையுடன் நடைபெற்றது. இரண்டாம் நாள் காலை 9 மணிக்கு துவங்கிய யாகசாலை பூஜை சங்கல்பத்துடன் விக்னேஸ்வர பூசை வேதிக்கர்ச்சனை நவக்கிரகாமம் நாடி சந்தனம் நடைபெற்றது

காலை 11 மணிக்கு மேல்திரவிய ஹோம் மகா பூர்ணா புதியுடன் யாத்திரை தனம் கடன் புறப்பாடு நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அருள்மிகு செல்வ விநாயகருக்கு 16 வகை வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மகா அஷ்ட பந்தன கும்பாபிஷேகவிழாவில் செல்வ விநாயகர் கோவில் நிர்வாகிகள் அன்பாலயம் அறக்கட்டளை சார்பிலும்சிவாச்சாரியார் குரு நாகசுப்ரமணியன் தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது அதனைத் தொடர்ந்து 2000 பேருக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.