• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

அங்கன்வாடி மைய மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த விவகாரத்தில் – நேரில்ஆய்வு செய்த எம்எல்ஏ விஜய் ..,

ByP.Thangapandi

Jun 4, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் ஊராட்சிக்குட்பட்ட உலைப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சூழலில், நல்வாய்ப்பாக குழந்தைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.,

இந்த சம்பவம் அறிந்த உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய், நேரில் ஆய்வு செய்து சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதோடு, அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளை மாற்று அரசு கட்டிடத்தில் வைத்து பயிற்றுவிக்க சேடபட்டி வட்டார ஊட்டச்சத்து அலுவலர் கலைவாணி மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உதவியுடன் தற்காலிக கட்டிடத்தையும் தேர்வு செய்து கொடுத்தனர்.,