விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்ட அவுரி, நித்திய கல்யாணி மருத்துவ பயிரில் அதிக அளவு அல்கலாய்டு இருப்பதால் அமெரிக்கா, ரஷ்யா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என. வேளாண் அறிவியல் நிலைய பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.

வெம்பக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நித்திய கல்யாணி மற்றும் அவுரி பயிர் சாகுபடி தொழில்நுட்பம் என்ற என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் வெம்பக்கோட்டை வட்டார நித்திய கல்யாணி மற்றும் அவுரி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் முத்தையா தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ராமசுப்ரமணியம், வேளாண் அறிவியில் நிலையத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக எடுத்துரைத்தார்.
வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை பேராசிரியர் பால சுப்ரமணியம் பேசுகையில், வெம் பக்கோட்டை வட்டாரத்தில் 166 ஹெக்டேர் பரப்பளவில் நித்திய கல்யாணி மற்றும் அவுரி சாகுபடி செய்து வருகின்றனர். நித்திய கல்யாணி, அவுரி சாகுபடி செய்வதில் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணத்தினால் சாகுபடி பரப்பு குறைந்த கொண்டே போகின்றது. இந்தியாவில் தமிழ்நாட்டில் குறிப்பாக வெம்பக்கோட்டை வட்டாரத்தில் விளைவிக்கப்படும் அவுரி, நித்தியகல்யாணி மருத்துவ பயிரில் அதிகளவில் அல்கலாய்டு இருப்பதால் அமெரிக்கா, ரஷ்யா நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு அந்நிய செலாவணி கிடைத்து வருகிறது.
இப்பயிர் சாகுபடி செய்ய குறைந்த அளவு நீர் தேவைப்படுகிறது. இவ்விரண்டு பயிர்களும் மருத்துவ குணம் வாய்ந்தது. பாரம்பரிய மூலிகை மற்றும் அழகு சாதன பொருட்கள் தயா ரிக்க பயன்படுகிறது.
மருத்துவ ரீதியில் பில் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன மருந்துகளுக்கு நித்திய கல்யாணியிலிருந்து எடுக்கப்படும் வின் பிளாஸ்டின் மற்றும் வின் கிறிஸ்டின் போன்ற வேதி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அவுரிபயிரில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. மலச்சிக்கல், தோல் பராமரிப்பு, கல்லீரல் நச்சு நீக்கம் போன்ற உடல் உபாதைகளை சரி செய்வதற்கு இதிலிருந்து எடுக்கப் படும் வேதிப்பொருளான சென செய்டுகள் பயன்படுகின்றன” என்று தெரிவித்தார்.
வேளாண்மை உதவி இயக்குனர் முத்தையா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மாரிராஜ், சுரேஷ், ஆகியோர் செய்து இருந்தனர்



