• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்..,

ByKalamegam Viswanathan

Jun 4, 2026

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சாமி தரிசன மேற்கொண்டார்.

முன்னதாக மதுரை மற்றும் விருதுநகரில் உள்ள பல்வேறு சார் பதிவாளர்கள் அலுவலகத்தில் சர்ப்ரைஸ் விசிட் அடித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள வருகை தந்தார், அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து சால்வைப் போத்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சாமி தரிசனம் முடித்து வந்த அமைச்சருக்கு கோவில் கம்பத்தடி மண்டபத்தில் வைத்து கோவில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு சுவாமி முருகன் கல்யாண கோலத்தில் இருக்கும் புகைப்படம் பரிசாக வழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் விமான மூலம் சென்னை புறப்பட்டார்.