விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அருப்புக்கோட்டை நகர திமுக சார்பில் எம்.எஸ்.கார்ணர் பகுதியில் திமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கு நகர திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று அன்னதானம் பெற்று சென்றனர்.

அதனைத் தொடர்ந்து காந்திநகர் பகுதியில் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



