• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் பிக் பாஸ் பிரபலம் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர்…

ByKalamegam Viswanathan

Jun 3, 2026

திருப்பரங்குன்றத்தில் பிக் பாஸ் பிரபலம் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர்: திருமணமாக வேண்டி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் இன்ஸ்ட்டா ரீல்ஸ் மூலமும் பிரபலமான, பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூலமும் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ டாக்டர் திவாகர். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், தான் இன்னும் ‘சிங்கிள்’ தான் என்றும் தொடர்ச்சியாகப் பேட்டிகளில் கூறி வருகிறார்.

இந்நிலையில், தனக்கு விரைவில் திருமணம் அமைய வேண்டி, முருகனின் திருமணத்தலமான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திவாகர் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். இதனை தனது இன்ஸ்ட்டா இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.