திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கம் சார்பில், 19வது மாவட்ட அளவிலான வூசு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு சங்க தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

5 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தவுலு பிரிவிகளில் குழு போட்டி சான் குவான், நான்கு வான், தாய்ச்சிகுவான், ஆயுத போட்டிகள் நடைபெற்றது. சீனர்கள் மட்டும்தான் நமது நாட்டின் பாரம்பரிய கலைகளையும் தற்காப்புக் கலைகளையும் கற்றுக் கொள்வார்களா ஏன் அவர்களுக்கு சளைத்தவர்கள் நாங்கள் அல்ல அவர்களின் நாட்டின் தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொள்வோம் உலகத்திற்கு வெளிப்படுத்துவோம் என்ற விதத்தில் மிகத் தீவிரமாக பயிற்சி எடுத்து மாணவ மாணவிகள் சீன பாரம்பரிய உடை அணிந்து 150க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அசத்தி தங்களது திறமைமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் சங்க செயலாளர் ஜாக்கி சங்கர், பொருளாளர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



