• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் விவசாயி நியாயம் கோரல்..,

ByPrabhu Sekar

May 26, 2026

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள இனாகல்பாளையம் கிராமத்தில் நிலம் தொடர்பான சர்ச்சை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆதிதிராவிடர் சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் தகாத முறையில் மற்றவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், எங்கள் சமூகத்தினரின் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்அவர்களிடம் நேரடியாக நியாயம் கேட்டு அந்த விவசாயி வீடியோவின் மூலம் மனு அளித்துள்ளார்.

“ஆதிதிராவிடர் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய தீர்வு வழங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.