தமிழகத்தில் அரசியல் சூழல் இன்றைய தினம் மாறி இருக்கிறது. மக்கள் விருப்பத்தின் பேரில் மாறியுள்ளது. 60 ஆண்டு காலமாக இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டணி ஆட்சியை அனுமதிக்காத நிலையில், தற்போது கூட்டணி ஆட்சி வந்திருப்பது ஜனநாயக அடிப்படையிலான நல்ல நகர்வு.

மக்கள் உளவியல் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அந்த மாற்றம் நடக்குமா என்று எல்லோரும் இன்று காத்திருக்கிறார்கள். அந்த மாற்றம் நிகழ, அரசுடன் முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம்.
பெண்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்- குற்றங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு காரணம் ஒட்டுமொத்தமாக ஆண்களின் மனநிலை போதைக்குள் சிக்கிக் கொண்டிருப்பதும், போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்திருப்பதும் தான்.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அரசு அதிகாரிகளை மாற்றம் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஆட்சியாளர்கள்அடுத்த தடம் பதிப்பதற்கான காலகட்டம் கொஞ்சம் ஆகுமென்றாலும், திராவிட மாடல் ஆட்சிதான் இன்னமும் நடந்து கொண்டிருப்பதாக திமுக சொல்வது அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, வன்முறை சம்பவங்களும், குற்றங்களும் இன்னமும் நிற்காமல் தொடர்வது கண்டனத்துக்குரியது.
குழந்தைகளுக்கு, பெண்களுக்கு எதிரான வன்முறை நடப்பது கண்டனத்திற்குரியது.
குற்றவாளிகளை கடும் தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு பெண் அமைச்சர்கள் உள்ள நிலையில் காவிரிக்குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு தரப்பில் முன்னெடுத்துச் சென்று செயல்படுத்த உறுதிப்படுத்த வேண்டும்.

பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்ட பெண் அமைச்சர்கள் பொறுப்போடு பதில் கூற வேண்டும்.
பிறகு பேசலாம்- அப்புறம் பேசலாம் என தெரிவிப்பது சரியல்ல. பொறுப்புணர்வுடன், குற்ற உணர்ச்சியோடு செயல்பட வேண்டும்.
இப்பிரச்சனையில் அமைச்சர்கள் பொறுப்பி லிருப்பவர்கள் எளிதாக தட்டிக் கழித்துச் செல்வது அவர்களுக்கு அழகல்ல.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் இனியும் நடைபெறாமல் தடுக்க உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு அறிவித்தும் மூடப்படாமல் எஞ்சியிருக்கும் டாஸ்மார்க் கடைகளையும் வலுவாக மூடப்பட வேண்டும்.
மக்கள் பாராட்டுகின்ற ஒரு அரசாக மாற்றிக் கொள்வதற்கு உறுதுணையாக மக்கள் பணிகளில் ஈடுபட்டு ரீல்ஸ்களில் கவனம் செலுத்தாமல் மக்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
ஆண்களை போதைக் கலாச்சாரத்தில் இருந்து மீட்க அவர்களுக்கான இருப்பையும், வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும்
டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும். போதைப் பொருள்களின் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும்.
போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு மாறுவதற்கான காப்பகங்களை உருவாக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் காப்பகங்களை அமைத்து மறுவாழ்வு மையம் மூலமாக வாழ்க்கையை சீரமைக்க வேண்டும்.
ஆண்கள் போதையையும், பெண்களையும் வடிகாலாக தேடுவது ஆபத்தான பழக்கம். இப்பிரச்சனையை நேற்றைய அரசு- இன்றைய அரசு என்று இல்லாமல் ஒவ்வொருவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இதுபோன்ற பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைப்போம், மீட்டெடுப்போம் என்று தான் இன்றைய தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப் பேற்றுள்ளது.
கூடுதல் பொறுப்புள்ள தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி குற்றச் செயல்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும்.
மக்கள் வரிப்பணத்தில் மக்களின் தீர்ப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதுடன், 5 ஆண்டு காலம் செம்மையாக செயல்பட வேண்டும் என்பதே பாமகவின் நோக்கம்.
பணம் செலவழிக்காமல் ஆட்சிக்கு வரலாம் என்பதை பல இடங்களில் இந்த தேர்தல் நிரூபித்துள்ளது.
பெரும்பான்மையாக பணம் செலவழிக்காதவர்கள் நிறையப் பேர் வெற்றி பெற்று சாமானியமானவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வந்திருக்கிறார்கள்.
.
காற்றாற்று வெள்ளமாக வந்துள்ள இவர்கள் மக்களுக்கானதாக மாற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதும், கொள்ளாததும் தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் கைகளில் தான் உள்ளது. தமிழக வெற்றி கழக அமைச்சர்கள் பலர் அனுபவம் போதாமின்மை, சமூகத்துடன் ஒன் றியில்லாத ஆட்கள், அதிமுக, திமுகவில் இருந்து வந்த ஆட்களாக இருக்கிறார்கள்.
மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்று பொறுத்திருந்து பார்க்க கால அவகாசம் அளிக்க வேண்டும்.
தேர்தல் சமயத்தில் முழுக்க முழுக்க குழந்தைகள் கையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசில் இருந்தது.
குழந்தைகள் விசில் ஊதி எதிரணியினருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய விடாமலிருந்தனர்.
தமிழக வெற்றிக்கழகம் குழந்தைகள் மனதை தன் வயப்படுத்தி வெற்றி பெற்றது உளவியல் ரீதியாக ஆபத்தான, மிகவும் மோசமான விஷயமாகும்.
இன்றைய தமிழக அமைச்சர்களுக்கு மக்கள் குறித்து எதுவுமே பதிலளிக்கத் தெரியவில்லை. மக்களின் நீண்ட காலப் பிரச்சனைகளுக்கோ, நிரந்தர தீர்வுகளை நோக்கியோ செல்கின்ற வாய்ப்புகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு குறைவாகவுள்ளது.
குழந்தைகள் மூலமாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பெண்கள் இன்றைய தினம் யோசிக்கத் தொடங்கி விட்டனர்.
குழந்தைகள் மனநிலைமையை பிடித்துக் கொள்வது இன்றைக்கல்ல என்றைக்குமே ஆபத்துதான்.
குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவது தான் என்றைக்குமே அனைவரும் செய்ய வேண்டிய நல்ல விஷயம்.
குழந்தைகள் வழியாக ஒரு அரசியலையோ அல்லது எந்த ஒரு கோட்பாடையோ உருவாக்க நினைப்பது ஆபத்தானது- வன்மையாக கண்டிக்கக் கூடியது. குழந்தைகள் மன நிலை மூலமாக ஆட்சியைப் பிடித்தது ஆபத்தானது தான். என்றார்.





