உலக பாரம்பரிய சோட்டோகான் கராத்தே சம்மேளனம் சார்பாக 24வது தேசிய அளவிலான கராத்தே போட்டி அஸ்ஸாம் போகேஸ்வரி புகானனி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் தமிழகத்தை சேர்ந்த 26 மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் சீஹான் கண்ணன் தலைமையில் பங்கு பெற்றனர்.
இதில், 7வயதுக்கு உட்பட்டோருக்கான சண்டை பிரிவில் சென்னையை சார்ந்த
ஓவியன் வெண்கல பதக்கம் பெற்றார், கட்டா சண்டை பிரிவில் ஸ்ரீ சாஹிரா
தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்றார்.

12 வயதுக்குட்பட்டோருக்கான சண்டை பிரிவில் தனூஷ்யா தங்கம் கட்டாபிரிவில்
வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றார். 13 வயது உட்பட்டோருக்கான
சண்டை பிரிவு மற்றும் கட்டா பிரிவில் கிரி நிஷாந்த் வெண்கலம் வென்றார்.
22 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கட்டா மற்றும் சண்டை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். பயிற்சியாளர்களுக்கான பிரிவில் கண்ணன் மற்றும்
திருப்பதி ஆகியோர்கள் பங்கு பெற்றனர்.

இதில்,சென்சாய் கண்ணன் சண்டை பிரிவில் வெள்ளி கட்டா பிரிவில் வெண்கலம் பெற்றார். சென்சாய் திருப்பதி கட்டா மற்றும் சண்டைபிரிவில் வெண்கலம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ஷிகான் சடர்ஜித் சவுத்ரி பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.





