• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஒற்றுமை எழுச்சி மாநில மாநாடு..,

ByPrabhu Sekar

May 8, 2026

மறைமலைநகரில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 43வது ஒற்றுமை எழுச்சி மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர்களின் 43வது ஒற்றுமை எழுச்சி மாபெரும் மாநில மாநாடு உற்சாகமாக நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் டைமன்ராஜா வெள்ளையன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக என்.ஆர். தனபால், விருகை கண்ணன், வி.ஜி. சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு, வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவன தலைவர் வெள்ளையன் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து 43வது வணிகர்களின் ஒற்றுமை எழுச்சி மாநில மாநாட்டை துவக்கி வைத்து, வணிகர்களின் ஒற்றுமை, உரிமைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினர்.

மேலும் இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் கிச்சா ரமேஷ், மாநில பொருளாளர் ஹரிகிருஷ்ணன், மாநில அவைத்தலைவர் தேவராஜ், மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் எம். இமானுவேல் ஜெயசீலன், மாவட்ட செயலாளர் உமாபதி, மாவட்ட பொருளாளர் லயன் கார்த்திக் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.