• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மது குடிக்க பணம்கொடுக்க மறுத்த தாயை கொலை செய்த மகனுக்கு வலை வீச்சு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்(56)இவருக்கு பெத்தம்மாள்(52) என்ற மனைவியும், பிரசாந்த் (30),பிரகாஷ்(28) பிரபு (27)என்று மூன்று மகன்களும் உள்ளனர்.

இதில் பிரகாஷ், பிரபு இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பிரசாத்துக்கு திருமணம் ஆகாததால் அவர் தாய் தந்தையருடன் தோட்டத்து வீட்டில் வசித்துக்கொண்டு வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி குடித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று மாலை 6.15 மணிக்குவீட்டுக்கு வந்த பிரசாந்த் தனது தாய் பெத்தமாளிடம் மது குடிப்பதற்குபணம் கேட்டு தகராறு செய்துள்ளார். தாய் பணம் தர மறுக்கவேஆத்திரம் அடைந்த பிரசாந்த் வீட்டிலிருந்த அருவாளை எடுத்து பெத்தமாவின் வலது புற கழுத்தில் வெட்டினார்.

உடனே அவர் ஐயோ அம்மா என்று அலற கழுத்தில் இருந்து ரத்தம் பொலபொலவென்று கொட்டியது.அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று திரண்டு வந்து படுகாயம் அடைந்த பெத்தம்மாவை காரில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்துபிரசாந்த்தை வலைவீசி தேடி வருகிறார்.