• Tue. Apr 28th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,

ByK Kaliraj

Apr 28, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடா சலபுரத்தில் உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கடற்கரைராஜ் வீட்டில் கடந்த 14ம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 122 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாத்தூர் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக திமுக வேட்பாளர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவரான ராமநாத புரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ (40) என்ற நபர் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக சரண் அடைந்தார்.

மேலும் நீதிமன்றத்தில் சரணடைந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட 44 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோவை சாத்தூர் நகர் போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து உள்ளன.

மேலும் ஆரோக்கிய ஜான் போஸ்கோ விடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் வேட்பாளரின் மருமகள் அபிநயா (30) அவருடைய கள்ளக் காதலன் சுரேஷ் குமார் (31)அவருடைய மனைவி பவானி (30)
ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட வேட் பாளரின் மருமகள் அபிநயா விடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது தனக்கும் தன்னுடைய கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது சுரேஷ்குமார் என்பவருடன் வாழ்ந்து வருவதாகவும் திருமணத்தின் போது தான் கொண்டு வந்த நகைகளை கணவர் வீட்டார் தர மறுத்ததாகவும் ஆதனால் திமுக வேட்பாளராகிய என்னுடைய மாமனாரை பழிவாங்கவே நண்பர் களின் உதவியுடன் கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் போட்டு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்ய வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 12 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.