• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மதுரை சித்திரை திருவிழா..,

ByKalamegam Viswanathan

Apr 27, 2026

மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி தெய்வயானை திருமணத்தை நடத்தி வைக்க பவளக் கனி வாய் பெருமாள் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு சுப்பிரமணிய சுவாமி தங்க பல்லக்கிலும் பவளக்கனி வாய் பெருமாள் சப்பரத்திலும் எழுந்தருளி மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் நாளை நடைபெறும் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றனர்.

இவர்களுக்கு வழி நெடுகிலும் திருக்கண் நடைபெற்று இன்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சென்றடைவார்கள். அதன் பின்பு மே 2ந் தேதி மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி தெய்வானை அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்துருளியும் பவளக்கனியாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை தருவார்கள்.

இவ்விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்திய பிரியா அறங்காவலர்கள் சண்முகசுந்தரம்,மணி செல்வம் பொம்ம தேவன், ராமையா மற்றும் கோயில் ஸ்தானிய பட்டர் கள் கோயில் பணியாளர்கள் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.