• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வேடசந்தூர் அருகே ஊருக்கு நடுவே உள்ள கலையரங்கம் இடிந்து விழும் அபாயம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் இந்து கோவில்கள் மற்றும் கிறிஸ்துவ ஆலயம் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலையரங்கம் உள்ளது.

இந்த கலையரங்கம் முறையாக பராமரிக்காத நிலையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து கொண்டே உள்ளதால் கான்கிரீட் கம்பிகள் தெரியும் அளவிற்கு சேதம் அடைந்துளளது.

ஊருக்கு நடுவே உள்ள கலையரங்கத்தில் வெயில் மற்றும் மழைக்கு ஒதுங்கும் பொதுமக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடன் தலையிட்டு பூத்தாம்பட்டி கலையரங்கத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கலையரங்கம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.