• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரம்..,

ByKalamegam Viswanathan

Apr 22, 2026

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை திருப்பரங்குன்றம் வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வாக்கு இயந்திரங்கள் எடுத்துச் செல்ல தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் தேர்தல் பார்வையாளர் மிங்மா டி ஷெர்பா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு வட்டாசியர் கவிதா ஆகியோர் தலைமையில்,

திருப்பரங்குன்றம் வேட்பாளர்கள் திமுக கிருத்திகா தங்கபாண்டி தவெக நிர்மல் குமார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் செய்யது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது.

மேலும் இந்த இயந்திரங்கள் திருப்பரங்குன்றம். தொகுதிப்பட்ட பகுதியில் உள்ள 352 வாக்குச்சாவடி மையங்களுக்கு உள்ளே லாரியில் ஆயுதமேந்திய போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.