• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ஹோட்டல் மற்றும் லாட்ஜ்களில் போலீசார் சோதனை..,

ByS.Ariyanayagam

Apr 22, 2026

திண்டுக்கல் நகரில் உள்ள தனியார் லாட்ஜ்கள் மற்றும் ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கும் உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள தனியார் லாட்ஜ்கள் மற்றும் விடுதிகள், ஓட்டல்களில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கி உள்ளார்களா. என்பது குறித்து போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல்லில் உள்ள தனியார் லாட்ஜ்களில் நேற்று இரவு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.