• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

திமுக, அதிமுக, தவெக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் இறுதி கட்ட பரப்புரை..,

ByKalamegam Viswanathan

Apr 22, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றம் திமுக அதிமுக தவெக வேட்பாளர்கள் திருப்பரங்குன்றம் கோவில் அருகே இறுதி கட்ட பிரச்சாரத்தை முடிப்பதற்காக வருகை தந்தனர்.

தவெக வேட்பாளர் நிர்மல் குமார் பதினாறாம் கால் மண்டபம் முன்பாக இறுதி கட்ட பரப்புரை பேசிக்கொண்டிருந்த போது திமுக பிரச்சார வாகனம் அங்கு வந்ததால் தாவே காவினர் தமிழக வெற்றி கழகத்தின் பாடல்களை ஒழிக்க விட்டு துண்டுகளை சுழற்றியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது திமுக வாகனத்தில் வந்த திமுக தொண்டர்களும் திமுக துண்டை சுழட்டியவாறு அங்கிருந்து கடந்து சென்றனர். மேலும் தவெக தலைவர் வசனங்களை (டிஎம்கேவிற்கும் டி வி கே விற்கும் தான் போட்டி வாசகங்களை ஒலிக்கச் செய்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து தவெகவினர் நடந்து கோவிலுக்கு வாசலுக்கு சென்ற நிலையில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சென்றார். வெளியே நிர்மல் குமாருக்கு ஆரத்தி எடுத்து வெளியே இருந்தவரே சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அங்கு இறுதி கட்ட பிரச்சாரத்தை முடிப்பதற்காக வந்த அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா மற்றும் அதிமுக தொண்டர்கள் அங்கிருந்த தவெக தொண்டர்களிடம் கோஷங்கள் எழுப்பினர். அங்கிருந்து தவெக தொண்டர்கள் அங்கு கலைந்து சென்றனர்.

திமுக வேட்பாளருக்காக காத்திருந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களின் இடையே அதிமுக வேட்பாளர் உள்ளே வந்தனர்.

திருப்பரங்குன்றம் திமுக அதிமுக தவெக தொண்டர்கள் ஒரே நேரத்தில் கோவில் வாசல் முன்பு குவிந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பிரச்சாரம் நேரம் முடிவடைந்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.