• Mon. Apr 20th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

அதிமுக – பாஜ கூட்டணி மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் -அர.சக்கரபாணி..,

தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், திமுக மண்டல பொறுப்பாளரும், திண்டுக்கல் மாவட்டம், ஓட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளருமான அர.சக்கரபாணி செய்தியாளரிடம் கூறியதாவது:

ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

தொகுதி மறு வரையறை திட்டம் என்பது மக்கள்தொகை அடிப்படையில் சமநீதியை உறுதி செய்ய வேண்டிய ஒன்று ஆனால் ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதா மாநிலங்களுக்கு இடையேயான சமநிலையை பாதிக்கும் வகையில் இருந்தது.
தமிழகத்தின் மக்கன் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளை பின்தள்ளும் வகையில் இருந்ததால் அது தோல்வியடைந்தது நியாயமானது.

மேலும், தேர்தல் நேரத்தில் இந்த மசோதாவை கொண்டு வந்த நேரத்தில், தமிழக முதல்வர் முக.க.ஸ்டாலினே முன்னின்று தொகுதி மறுவரையறை மசோதா நகல் எரிப்பு போராட்டத்தை நடத்தினார். இந்த தீ தமிழகம் முழுமையாக பரவியது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள், அனைத்து கட்சியினர். பொதுமக்கள் என அனைவரும் போராட்ட களத்தில் குதித்தனர். வீடுகளில் கருப்புக்கொடியும் ஏற்றப்பட்டது. முதல்வரின் தேனி, திண்டுக்கல் சுற்றுப்பயணத்தின் போது தொகுதி
மறுவரையறை மசோதா தோல்வி அடைந்தது தனிப்பட்ட முறையில் எங்களுக்கு மகிழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலினே திண்டுக்கல்லில் பட்டாசு வெடித்து கொண்டாடியது தனிச்சிறப்பு.

ஓட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறீர்கள்? இந்த முறை வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது.

ஒட்டன்சத்திரம் என்பது திமுகவின் வலுவான கொட்டை மக்களுக்கு நேரடியாக சென்றடைந்த தமிழக அரசின் நலத்திட்டங்கள் எங்களுக்குப் பெரும் ஆதரவாக உள்ளன. இந்த முறையும் வெற்றி பெற்று ஏழாவது முறையாக சட்டமன்றம் செல்லது உறுதியாக நடக்கும்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தமிழக அரசின் முக்கிய சாதனை திட்டங்கள் என்னென்ன?

ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளராக 1996ம் ஆண்டு திமுக துணைப்
பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஐ.பெரியசாமியால் நான் அடையாளம் காட்டப்பட்டேன். ஒட்டன்சத்திரம் தொகுதியில் தமிழக அரசு சார்பில் பலவேறு வளர்ச்சி திட்டங்கள் நடைமுறைப்ப டுத்தப்பட்டுள்ளன. தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை போக்க ரூ.930 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.22 கோடி மதிப்பீட்டில் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூர். ரூ.15 கோடி மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி விருப்பாச்சியில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம், கிராமப்புற மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் சென்னைக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு போட்டி தேர்வு பயிற்சி மையம் என கூறலாம்.

மேலும், ஒட்டன்சத்திரம் விவசாயிகள் அதிகம் உள்ள தொகுதி. இங்கு தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய காய்கறி மார்க்கெட் உள்ளது. மேலும், தொகுதியில் ரூ.1,050 கோடி மதிப்பீட்டில் 13 புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.50 கோடி மதிப்பீட்டில் 100 புதிய சமுதாயக் கூடங்கள் கூடங்கள், வாகரையில் மக்காச்சோள ஆராய்ச்சி மையம், சென்னைக்கு அடுத்தபடியாக ஓட்டன்சத்திரத்தில் ரூ.12 கோடியில் நகரும் படிக்கட்டுக்களு டன் கூடிய உயர்மட்ட நடை பாதை மேம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக ரூ.112 கோடி மதிப்பீட்டில் 912 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தொகுதி முழுவதும் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் திமுக எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?

திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. மக்கள் ஆதரவு மிகுந்துள்ளது. 7 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிமுக – பாஜ கூட்டணிக்கு இந்த தேர்தல் எப்படி இருக்கும்?

அதிமுக – பாஜ கூட்டணி மக்கள் மனதில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்று. அவர்களே கடந்த எம்பி தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவில்லை. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர். திடீரென இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்துள்ளன. இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் புறம் தள்ளுவார்கள். நிராவிட மாடல் அரசின்
சிறப்புமிகு நலத்திட்டங்கள் மூலம், திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரசாசமாக உள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து?

அதிமுக தேர்தல் அறிக்கை என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளின் தொகுப்பு என்றுதான் கூற வேண்டும். கடந்த காலத்தில் நிறைவேற்றாத திட்டங்களை மீண்டும் கூறுவது மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி மேலும், அவர்கள் ஆட்சியில் தரமற்ற பொருட்களை இலவசமாக வழங்கினர், ஆனால், திமுக ஆட்சியில் கலைஞர் டிவி முதல் அனைத்துமே தரமானவையாகவே தரப்பட்டுள்ளன.

சூப்பர் ஹீரோவான திமுகவின் தேர்தல் அறிக்கை பற்றி?

திமுக தேர்தல் அறிக்கை என்பது மக்கள் வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் உள்ளது. 10,000 புதிய பேருந்துகள், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள், தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி ரூ.2.50 லட்சம் கோடியில் இருந்து 5 லட்சம் கோடி ஆக உயர்த்தப்படுதல், கல்லூரி மாணவர்களின் எதிர்கால திறன் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு பாடத்திட்டங்கள் பயிற்சிகள் உருவாக்குதல், தகவல் தொழில்நுட்ப துறையில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குதல், கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம் போன்ற துறைகளில் பல்வேறு முன்னேற்றங்களை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இல்லதரத்தரசிகளுக்கான ரூ.3 ரூ.8 ஆயிரம் கூப்பன் மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியின் முக்கிய சாதனையாக
எதை கூறுவீர்கள்?

பெண்களுக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திட்டம். விடியல் பய ணம், அரசு பள்ளிகளின் மேம்பாடு, மருத்துவ வசதிகள் விரிவாக்கம் போன்றவை மிக முக்கிய சாதனைகள், இவை மக்களின் வாழ்க்கையில் நேரடியாகவே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

தொகுதி மக்களிடம் தங்களுக்கு உள்ள உறவு எல்லாது உள்ளது?

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினர் என்று மட்டும் அல்லாமல், தொகுதி மக்கள் ஒவ்வொருவரும் என்னை குடும்ப உறுப்பினராகவே பார்க்கின்றனர். மக்கள் தங்களது தேவைகளுக்காக எனது தொலைபேசி எண்ணிற்கு அழைத்தால் பதில் சொல்ல முடியாத நேரத்தில், அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு மீண்டும் அழைத்து தேவைகளை கேட்டு அறிந்து குறைகளை நீர்த்து வைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன். மேலும் இளம் தலைமுறையினர், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதன் மூலம் இளைஞர்களிடம் நேரடி தொடர்பில் உள்ளேன்.

தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சிகளின் வரவால் பாதிப்பு ஏற்படுமா?

புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் மக்கள் பணியில் ஈடுபடாமலே பதவிக்கு வர நினைக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை திட்டங்கள் எங்களின் வெற்றியை நீர்மாளிக்கும்.

புதிய கட்சி தொடங்கியவர்கள் பற்றி?

புதிய கட்சியை தொடங்கி பதவிக்கு வர நினைக்கிறார்கள். தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை திட்டங்கள எங்களின் வெற்றியை தீர்மானிக்கும். முக்கிய போட்டி திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக்குள் தான் இருக்கும்.

அரசின் சாதனைகளை ஒருங்கிணைத்து வியூகம் வருந்து தேர்தல் பணி மேற்கொண்டு வருகிறோம். இந்த தேர்தலில் மிகப்பெரிய சரித்திர வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?

தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளை மதித்து மீண்டும் ஆதரவு அளிப்பார்கள். மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். கடந்த கால சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் ஆகியவை எங்களின் பலம் வரும் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். இவ்வாறு அமைச்சர் அர‌சக்கரபாணி கூறினார்.