• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

வணிகவியல் துறைமன்றத் தொடக்க விழா..,

ByK Kaliraj

Jul 27, 2026

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறையின் மன்றத் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இளங்கலை மூன்றாமாண்டு மாணவி பவித்ரா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

அவர் பேசியது மாணவர்கள் பாடநெறி சாராக் கூடுதல் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் இத்தகைய செயல்பாடுகள் தனித்திறன் வளர்ச்சி, ஆளுமை மேம்பாடு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளுக்கு வழிவகுப்பதோடு, மாணவர்களின் கல்விப் பயணத்தை முழுமையானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார், சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாணவர்கள் பட்டயக் கணக்காளர், கணினி அறிவியல், செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் போன்ற தொழில்முறை படிப்புகளைப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சமூகத்தின் தேவைகளுக்கும், வல்லுநர்களின் பங்களிப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க மாணவர்கள் முயல வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சமுதாயத்திற்குத் தொழில்முறை வல்லுநர்களின் தேவை குறித்தும் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, இளங்கலை மூன்றாமாண்டு வணிகவியல் மாணவர்.கணேஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சிவகாசியைச் சேர்ந்த ஜேசிஐ வாழ்நாள் கௌரவ உறுப்பினர், பட்டயக் கணக்காளர் மகாராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் தமது உரையில், நவீன உலகிற்கு ஏற்பத் திறன்களை வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் செயற்கை நுண்ணறிவு, வரிவிதிப்பு மற்றும் கணக்கியல் துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் குறித்து விளக்கிய அவர், சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க மாணவர்கள் 21-ஆம் நூற்றாண்டின் நவீன திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இளங்கலை மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி கீர்த்தனா ஸ்ரீ நன்றி கூறினார். வழங்கினார்.

இளங்கலை மூன்றாமாண்டு வணிகவியல் மாணவிகள் ஜோஷினா மற்றும் கீர்த்தனா ஸ்ரீ ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். வணிகவியல் துறை உதவிப பேராசிரியர் முனைவர் எஸ் குலோத்துங்கபாண்டியன் இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.