• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன்..,

ByRadhakrishnan Thangaraj

Apr 20, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பாக போட்டியிடும் பிரிசில்லா பாண்டியன் இராஜபாளையத்தில் மாடசாமி கோவில் தெரு, பழையபாளையம் சோமயபுரம் – முடங்கியா ரோடு பொன்விழா மைதானம் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தெரு சீனிவாசன் புது தெரு திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்பொழுது 13 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் லிங்கா முருகன் தலைமையில் பொன்விழா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு வெண்கல வாழும் தாமரை மலரும் கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டது.இந்த கூட்டத்தில் பேசிய வேட்பாளர் பிரசில்லா பாண்டியன் இராஜபாளையத்தில் பாராளுமன்ற தேர்தலின் பேதை வீடு எடுத்து தங்கி விட்டேன் நான் வெளியூருக்காரி அல்ல.

நான் சட்டம் படித்தவள் யாருக்காகவும் அஞ்ச மாட்டேன் மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் இந்த பகுதியில் சட்டக் கல்லூரி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொழில் பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொண்டு வருவேன் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டு வருவேன் எனக்கு தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என்.எம் கிருஷ்ணராஜ் வடக்கு நகர செயலாளர் வழக்கறிஞர் துறை முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.