• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பரப்பலாறு அணை தேர்தல் முடிந்தவுடன் தூர்வாரப்படும் -அர.சக்கரபாணி..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீரனூர் பேரூராட்சி, மானூர், எரமநாயக்கன்பட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வடகாடு ஊராட்சி பால்கடை, ஒட்டன்சத்திரம் நகராட்சி சங்குபிள்ளைபுதூர், ஏ.பி.காலனி, கே.கே., நகர், ஆர். எஸ்.பி.நகர், சம்சுதீன் காலனி, துல்க ருணை சிக்கந்தர் நகர், குறிஞ்சி நகர், பழனிக வுண்டன்புதூர், சண்முகவேல்புரம், ஏ.பி.பி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது அவர் பேசியபோது கூறியதாவது:

மேற்கு தொடர்ச்சி மலை கிராமம் ஆன வடகாடு ஊராட்சியில் உள்ள பரப்பலாறு அணையை தூர்வார அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அணைதூர்வாரப்படும்.

7 ஆயிரம் முதியோர், கைம் பெ ண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளன. போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் ரூ.708 கோடியில் 472 ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்து அகலமான சாலையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. வடகாடு ஊராட்சி பாச்சலூர் பிரிவு முதல் பரப்பலாறு அணை வரை ரூ.2 கோடியில் சாலை மேம் படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்’ பாலு, ஒன்றிய துணைச் செயலாளர் தங்கச்சியம்மாபட்டி முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.